முஸ்லிம்களுக்குத் பதவிகளை அள்ளி வழங்குவதில் தான் எப்போதும் நன்றியுணர்வுடன் செயற்பட்டிருப்பதாக அடிக்கடி தெரிவித்து வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மேலும் ஒரு பிரதியமைச்சு பதவியை இன்று வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், துறைமுகங்கள், கப்பற்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இன்றைய தினம் வீ. இராதாகிருஷ்ணன் , ரவீந்திர சமரவீர ஆகியோர் கபினஸ்ட் அந்தஸ்த்து இல்லாத அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஏப்ரலில், கண்டி - திகன வன்முறையையடுத்து லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி, குறித்த வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியமை குறித்து அதிருப்தி வெளியிட்ட முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தாம் முஸ்லிம்களுக்கே பெருந்தொகை பதவிகளை வழங்கியிருப்பதாகவும் தம்மைப் பார்த்து முஸ்லிம் சமூகத்துக்கு நன்றி மறந்தவர் என யாரும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment