டி.ஏ ராஜபக்ச நினைவக புனர்நிர்மாணத்தின் பேரில் பொது மக்கள் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கோத்தபாய ராஜபக்ச மற்றும் மூவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் விசாரணை ஜனவரி 11ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமது கட்சிக் காரர்களுக்குத் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையென கோத்தா தரப்புக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வாதிட்டிருந்த நிலையில் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்ததன் ஊடாக தொடர்ச்சியாக கோத்தபாய கைதிலிருந்து தப்பி வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment