கடந்த வருடத்துக்கான க.பொ.த உயர் தர பரீட்சைப் பெறுபேறுகள் வருட இறுதியில் வெளியாகியிருந்த நிலையில் நாட்டின் இலவச (அரச) கல்விக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.
உயர் தரம் கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்றவர் எனும் ரீதியில் அவரது பரீட்சைப் பெறுபேறுகள் அரச பாடசாலைகளின் பெறுபேறுகளுடன் ஒப்பிடப்பட்டிருக்கக் கூடாது எனவும் இவ்வாறு நடந்தது இதுவே முதற்தடவையெனவும் இது ஒரு சதியெனவும் பந்துல மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கின் போதிலும் மாணவர்கள் உள்நாட்டு பாடத்திட்டத்திலும் கல்வி கற்கின்றமையும் ஆங்கிலம் தவிரவும் சிங்கள - தமிழ் மொழிகளையும் கற்றுக்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment