இலங்கை மண்ணில் 1994ம் ஆண்டின் பின் முதற்தடவையாக அமெரிக்க பிரஜைகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் கொழும்பில் 108 கோடி ரூபா பெறுமதியடின போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை அதில் இருவர் அமெரிக்க பிரஜைகளாவர். மேலும் ஒரு ஆப்கனியருடன் இரு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கச்சிதமான முறையில் பக்கற்றுகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 90 கிலோ ஹெரோயின் இன்றைய தினம் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment