மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியின் முன்னெடுப்பில் இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அஹமட் அலி இப்ராஹிம் அல் முஅல்லா (UAE Aid) நிதியுதவியுடன் 8000 மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 12, பாத்திமா கல்லூரி (2800), பதியுதீன் கல்லூரி மாணவர்களுக்கு (590) இன்றைய தினம் சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ள அதேவேளை 8000 மாணவர்களுக்கு தலா 6.5 மீற்றர் அளவான சீருடைகள் வழங்கப்படவுள்ளதாக ஆளுனர் அசாத் சாலி தெரிவித்தார்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், அரச பாடசாலைக் கல்வி மீதான சமூகத்தின் நாட்டத்தை அதிகரிக்கவும் வேலைத்திட்டங்கள் அவசியப்படுவதாக சோனகர்.கொம் நேர்காணலின் போது தெரிவித்தார்.
கடந்த காலங்களிலும் முஸ்லிம் மகளிர் கல்லூரி, பாத்திமா கல்லூரி மற்றும் ஹைரியா பாடசாலைகளின் ஆசிரியர்,அதிபர் இல்லா பிரச்சினைகளை அசாத் சாலி முன் நின்று தீர்த்து வைத்திருந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment