களுகங்கை நீர்த்தேக்கத்தினால் நீரில் மூழ்கிய லக்கல நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்ட புதிய லக்கல நகரம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (08) முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
ஒக்டோபர் அரசியல் சர்ச்சையின் பின் ஜனாதிபதி மைத்ரி - சஜித் பிரேமதாச, அர்ஜுன ரணதுங்க, தயா கமகே உட்பட முக்கியஸ்தர்கள் ஒரே நிகழ்வில் இன்று காட்சியளித்திருந்தனர்.
நவீன வசதிகளுடன் கூடிய புதிய லக்கல நகர அமைப்புக்கு 4,500 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment