அமைச்சரவையின் எண்ணிக்கையை ஆகக்குறைந்தது 35 ஆகக் கூட்டுவதற்கு தமது கட்சி எதிர்பார்ப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் ரஞ்சித் மத்தும பண்டார.
நெருக்கடியான கால கட்டத்தில் கட்சிக்காகத் தொடர்ந்தும் முன் நிற்போர் அமைச்சரவை நியமனங்களின் போது புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சிக்குள் முரண்பாடு நிலவி வருவதோடு பிரதியமைச்சு பதவிக்கு தற்போது பாரிய போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அமைச்சு பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் இதற்குத் தீர்வு காணலாம் என ஐக்கிய தேசியக் கட்சி தலைமை நம்புகின்றமையும், இச்சூழ்நிலையில் பட்ஜட் வாக்கெடுப்பு தொடர்பிலும் சந்தேகம் உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment