ஆகக்குறைந்தது மூன்று மாதங்களுக்கொரு முறையாவது நாடாளுமற்ற சபையமர்வில் கலந்து கொள்ள வேண்டிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கடந்த ஓகஸ்ட் முதல் இதுவரை கலந்து கொள்ளவில்லையென ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதியிடம் இது குறித்து தெரிவிக்கும் பொறுப்பையேற்றுள்ளார் லக்ஷ்மன் கிரியல்ல.
சட்ட நிறைவேற்றங்கள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டிய ஜனாதிபதி ஆகக்குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சபை அமர்வில் கலந்து கொள்ள வேண்டிய நியதியை மைத்ரிபால சிறிசேன பின்பற்ற வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment