சவுதி அரசுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பயனாக இம்முறை இலங்கைக்கான ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.
தற்போது சவுதி சென்றுள்ள அமைச்சர் ஹலீம் அவர்களுக்கு அங்கு சவுதி அரசாங்கத்தின் ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சருடன் ஜித்தாவில் நடாத்திய பேச்சுவார்த்தையின் பயனாக கோட்டாவின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடங்களில் ஆரம்பத்தில் 2800 - 3000 வரையிலேயே ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment