மணல் கொள்ளையரின் தாக்குதலுக்குள்ளாகி ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் காயமுற்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூவரே மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை நிறுத்த முற்பட்ட வேளை இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், தாக்குதலையும் மீறி வாகனத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளதாகவும் வாகனத்தில் வந்த மூவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment