எதிர்வரும் ஏப்ரல் முதல் திருகோணமலை துறைமுகம் 24 மணிநேரமும் இயங்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சாகல ரத்நாயக்க.
இதற்கேற்ப புதிய ராடார் மற்றும் வழிகாட்டி உபகரணங்கள் 1 பில்லியன் யென் ஜப்பான் நிதியுதவியுடன் பொருத்தப்படவுள்ளதாகவும் காலி துறைமுகமும் இவ்வாறே அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் சாகல மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் துறைமுகங்கள் வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பின் கீழ் சென்றுவிட்டதாக அரசியல் மட்டத்தில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment