விசேட உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான நிதி முறைகேட்டு வழக்கு ஜனவரி 22 முதல் தொடர்ச்சியாக விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஏ ராஜபக்ச நினைவக புனர்நிர்மாணத்தின் பேரில் பொது மக்கள் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக கோத்தபாய உட்பட ஐவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் தனது கைதைத் தவிர்ப்பதற்கு கோத்தபாய நீண்ட காலமாக நீதிமன்ற உதவியை நாடி வந்திருந்த நிலையில், ராஜபக்க அரசின் ஊழல்களை துரிதமாக விசாரிக்கவென அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில் வழக்கு விசாரணை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment