மஹிந்தவிடம் ஸ்ரீலங்கனால் அறவிட முடியாமல் போன ரூ. 122.3 மில்லியன்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 January 2019

மஹிந்தவிடம் ஸ்ரீலங்கனால் அறவிட முடியாமல் போன ரூ. 122.3 மில்லியன்!


2009 - 2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்சவுக்கான பிரத்யேக விமான சேவை வழங்கியதன் கட்டணம் 122.3 மில்லியன் ரூபா ஜனாதிபதி செயலகத்தால் ஸ்ரீலங்கனுக்கு வழங்கப்படவில்லையென தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிதி முறைகேடுகள் தொடர்பிலான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கென பிரத்யேக விமான சேவைகளைப் பெறுவதில்லையெனவும் மஹிந்தவின் காலத்தில் ஸ்ரீலங்கன் பயணிக்காத பல இடங்களுக்கும் அவருக்கென பிரத்யேக சேவைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment