தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 700 ரூபாவாக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Saturday, 26 January 2019

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 700 ரூபாவாக உயர்வு!


1000 ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராடி வரும் நிலையில் சம்பளத்தை 700 ரூபாவாக உயர்த்த இணக்கம் தெரிவித்துள்ளது பிராந்திய தோட்ட உரிமையாளர்கள் அமைப்பு.



இதனடிப்படையில் தினசரி அடிப்படைச் சம்பளம் 600 ரூபாவிலிருந்து 700 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் ஏனைய கொடுப்பனவுகளுடன் இணைக்கையில் 850 ரூபா வரை இத்தொகை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்துடன் இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment