2014ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அமெரிக்காவிடமிருந்து பெற்ற ஆயிரம் மில்லியன் டொலர் கடனைத் தமது அரசு இம்மாதம் திருப்பிச் செலுத்தி கடனையடைத்து விட்டதாக தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா.
பெரும்பாலான கடன்கள் பகுதி பகுதியாகவே திருப்பிச் செலுத்தப்பட்டு வருகின்ற போதிலும் குறித்த கடன் ஒரே தடவையில் அடைக்கப்படும் நிபந்தனையிலேயே 6 வீத வட்டிக்குப் பெறப்பட்டிருந்ததாகவும் அதனை ஐ.தே.மு அரசு தற்போது திருப்பிச் செலுத்தியுள்ள அதேவேளை இது போன்று மேலும் பல கடன் சுமைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிததாக சர்வதேச நாணய நிதியம், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சீனாவிடமிருந்து கடன்கள் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment