மக்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவினால் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் முன் வைக்கப்பட்டிருந்த திட்டங்களை தனதாக சித்தரித்து புத்தகம் வெளியிட்ட விமல் வீரவன்ச, டில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபா அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது வர்த்தக உயர் நீதிமன்றம்.
'நெத்த வெனுவட்ட எத்த' எனும் பெயரில் விமல் வீரவன்ச வெளியிட்ட புத்தக உரிமையும் டில்வின் சில்வாவுக்கே வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
புத்தக வெளியீட்டுக்குத் தடை கோரி முன்னதாக ஜே.வி.பி வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் விமல் வீரவன்ச புத்தகத்தை வெளியிட்டிருந்தமையும் தற்போது நீதிமன்றம் ஊடாக டில்வின் சில்வா தனது உரிமையை வென்றெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment