இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தைக் கெளரவிக்குமுகமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனக் கட்டிடங்கள், இல்லங்கள் என்பனவற்றில் தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதிக்குள், தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறும் அமைச்சர் அனைவரிடமும் கேட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையில், காலி முகத்திடலில், பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 9.00 மணி முதம் இடம்பெறவுள்ள இச்சுதந்திர தின விழா நிகழ்வில், மாலை தீவு புதிய ஜனாதிபதி இப்றாஹீம் முஹம்மத் சாலிஹ், விசேட அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment