பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ஞானசார பெரும்பாலும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்படுவது உறுதியாகியுள்ளதாக தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடத்திற்கான பட்டியலில் ஞானசாரவின் பெயர் இணைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகளை ஆதாரங்காட்டி தகவல் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை அவரது விடுதலையை எதிர்த்து சந்தியா எக்னலிகொட ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சந்தியாவை அச்சுறுத்திய வழக்கில் பிணை பெறுவதற்கு அடிப்படையாக அமைந்த ஞானசாரவின் மேன்முறையீடு மீதான தீர்ப்பு எதிர்வரும் 8ம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த வழக்கில் ஞானசாரவுக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த போதிலும் இரு வாரங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், 8ம் திகதி மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டால் அவ்வழக்கில் மீண்டும் ஞானசார சிறை செல்ல நேரிடும் அதேவேளை, ஏலவே சிறைச்சாலை வைத்தியசாலையில் கழித்த காலம் கணக்கெடுக்கப்பட்டு சிறைத்தண்டனை ஒத்தி வைக்கப்படவும் கூடும் எனவும் அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment