இனவாதத்தை ஊக்குவிப்பதில் முஸ்லிம்களும் பங்களிக்கிறார்களா? (video) - sonakar.com

Post Top Ad

Sunday, 23 December 2018

இனவாதத்தை ஊக்குவிப்பதில் முஸ்லிம்களும் பங்களிக்கிறார்களா? (video)


இனங்களுக்கிடையிலான முறுகல் முழுமையாக தணிந்து விட்டது என்று நம்பத் தயாரில்லாத நிலையில் சமூக மட்டத்தில் பல்வேறு அச்சம் மற்றும் சந்தேகம நிலவி வருகிறது.


இந்நிலையில், ஞானசார முஸ்லிம் சமூகத்துடன் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள முயல்வது குறித்தும் குறிப்பிட்ட அளவு சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில், அண்மையில் ஞானசாரவை சந்தித்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி உட்பட்ட பிரமுகர்களிடம் எதிர்காலம் தொடர்பான பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம், சோனகர்.கொம் இதற்காக வாசர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்காக குறித்த பிரமுகர்கள் பங்கேற்ற நேரலை நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது. இதன் போது கருத்துரைத்த பிரமுகர்கள் இனவாதத்தை ஊக்குவிப்பதில் முஸ்லிம்களது பங்கும் அமைவதாக சுட்டிக்காட்டியிருந்ததுடன் ஞானசாரவுடனான சந்திப்பு எதிர்கால கலந்துரையாடலுக்கான வழியொன்றைத் திறந்திருக்கிறதே தவிர, அவருடைய சட்டப்பிரச்சினைகளுக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்புமில்லையெனவும் விளக்கியிருந்தனர்.

நேரலையில் போது பதியப்பட்ட முழுமையான காணொளியை இங்கு காணலாம்.

No comments:

Post a Comment