கடந்த டிசம்பர் 16ம் திகதி கொடகாவெல பகுதியில் ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா உட்பட நால்வருக்கு எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாகவும் இந்நிலையில் விளக்கமறியல் வழங்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment