கொழும்பு சாஹிரா கல்லூரி அணியை பெனல்டி முறையில் தோற்கடித்து 18 வயதுக்குக் உட்பட்டோருக்கான அகில இலங்கை கால்பந்து போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது கொழும்பு றோயல் கல்லூரி.
முன்னராக காலிறுதிப் போட்டியில் கொழும்பு ஹமீதியாவை தோற்கடித்து சாஹிராவும், யாழ் பெற்றிக்ஸ் அணியைத் தோற்கடித்து றோயல் கல்லூரியும் அரையிறுதிக்குத் தேர்வாகியிருந்தன.
இந்நிலையில், இன்று சுகததாஸ விளையாட்டரங்களில் இடம்பெற்ற போட்டி 1-1 கோல் கணக்கில் முடிவுற்றிருந்த நிலையில் பெனல்டி முறையில் கோழும்பு றோயல் கல்லூரி, 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
றோயல் பந்து காப்பாளர் அசாத் மிகத்திறமையாக விளையாடி வெற்றிக்கான கோலினையும் பெற்றதோடு மூன்று கோல்களையும் தடுத்து அணியின் வெற்றிக்குப் பங்களித்தமையும் சிஷான் பிரபுத்த தலைமையிலான றோயல் அணிக்கு முஹமத் ஹசன் ரூமி தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடைமயாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.
-P. Rahman
-P. Rahman
No comments:
Post a Comment