ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமை பெற்றதாக விளம்பரப்படுத்திய மஹிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சந்தா செலுத்துவதாகவும் அவர் அக்கட்சியின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கிறார் WDJ செனவிரத்ன.
மஹிந்த, நாமல், சுசில் மற்றும் செனவிரத்ன ஆகியோரே நவம்பர் 11ம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், சுசில் பிரேமஜயந்த தான் பெரமுமுனயில் சேரவில்லையென ஏலவே நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment