ISIS அமைப்புக்கு எதிரான யுத்தம் சிரியாவில் முடிந்து விட்டதாகக் கூறும் ட்ரம்ப் நிர்வாகம் அங்கிருந்து அனைத்து அமெரிக்க துருப்புகளையும் மீள அழைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க தலையீட்டினையடுத்து சிரிய அதிபர் அசாத் பதவியிறக்கப்படுவார் என சவுதி உட்பட நட்பு நாடுகள் எதிர்பார்த்திருந்த போதிலும் அங்கு ரஷ்ய தலையீடு களநிலவரத்தை மாற்றியமைத்ததுடன் அசாத் நிர்வாகத்துக்கு பலமாக அமைந்திருந்தது.
இந்நிலையில் சிரியாவில் ஐசிசுடான யுத்தம் முடிந்து விட்டதாகவும், தமது துருப்புக்கள் மீள அழைக்கப்படுகின்ற அதேவேளை தேவையேற்படின் மீளவும் அமெரிக்க இராணுவ தலையீடு இருக்கும் எனவும் வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment