IMFன் பேச்சை விட்டு நாட்டு மக்களுக்கு 'நிவாரணம்' கொடுங்கள்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday, 21 December 2018

IMFன் பேச்சை விட்டு நாட்டு மக்களுக்கு 'நிவாரணம்' கொடுங்கள்: மஹிந்த


சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளைக் கைவிட்டு, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் வரவு-செலவுத் திட்டம் அமைய வேண்டும் என தெரிவிக்கிறார் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச.



ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் அரச செலவீனங்கள் மற்றும் பொது சேவை ஊழியர்களின் ஊதியங்கள் வழங்குவதன் அடிப்படையிலான இடைக்கால பட்ஜட்டே தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

எனினும், சர்வதேச சக்திகளின் பேச்சைக் கேட்காது நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு மஹிந்த அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment