பிரதமர் பதவியை சட்டவிரோதமாகப் பெற்றுக்கொண்ட கையோடு அதிரடியாக தமக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏலவே அக்கட்சியில் இணைந்து கொண்டதாக தெரிவித்த பலர் தற்போது மறுதலிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அக்கட்சியின் பினாமி தலைவர் ஜி.எல் பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜயந்த மற்றும் திலகரத்ன டில்ஷான் தவிர்ந்து ஏனையோர் தமக்கும் பெரமுனவுக்குமான தொடர்பினை மறைக்க ஆரம்பித்துள்ளனர்.
பசில் ராஜபக்ச முதலாவதாக உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட போதிலும் அவர் இரட்டைக்குடியுரிமை வைத்திருக்கும் நிலையில் தனது அரசியல் ஈடுபாட்டை பேச்சளவோடு நிறுத்திக் கொண்டுள்ளமையும் தான் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலேயே அமெரிக்க குடியுரிமையைக் கைவிடப் போவதாக கோத்தா தெரிவித்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, சிங்கள தேசியவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முஸ்லிம்களைக் கவர முஸ்லிம் பெரமுன எனவும் தமிழ் பெரமுன எனும் பெயரில் தமிழ் மக்களைக் கவரவும் இரட்டை நிலைப்பாட்டில் இயங்க முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment