அமைச்சரவைப் பட்டியலில் தனது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் அதனை தனிப்பட்ட பழிவாங்கலுக்காக நிராகரித்ததன் மூலம் தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.
சரத் பொன்சேகா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளுங்குட்சிக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று பதவி வழங்கப்படாத அதேவேளை ஜனாதிபதி - பிரதமர் உட்பட 30 பேர் கொண்ட அமைச்சரவை ஏலவே உருவாக்கப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக ஜனாதிபதி சட்ட-ஒழுங்கு அமைச்சைத் தன் வசப்படுத்த முடியாது என நேற்று வரை தெரிவித்து வந்த போதிலும் தற்சமயம் சட்ட-ஒழுங்கு, பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி, சுற்றுப்புறச் சூழல் உட்பட்ட பொறுப்புகளை ஜனாதிபதி தன் வசமே வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment