கஞ்சா வைத்திருந்ததாக நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த மரணத்தையடுத்து இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment