எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தை மஹிந்த ராஜபக்ச ஜனவரி நடுப்பகுதியில் பொறுப்பேற்பார் என பெரமுனவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு 7, ஸ்ரீமத் மார்கஸ் பெர்னான்டோ மாவத்தையில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தை மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்று அங்கிருந்து எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகர் மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் நீதிமன்றை நாடும் வாய்ப்பும் காணப்படுகின்றமையும் மஹிந்த இன்னும் ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பு உறுப்பினரே என அக்கட்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment