ஐக்கிய தேசியக் கட்சி வசம் அமைச்சுக்கள் இருக்க, சுதந்திரக் கட்சியினர் கூட தமது தேவைகளை நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நாடி நிற்பதைக் காண தனக்கு வருத்தமாக இருப்பதாகவும் விரைவில் முக்கிய அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்த அதேவேளை துமிந்த, மஹிந்த அமரவீர குழு ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
தேசிய அரசொன்று அமைந்தால் அமைச்சரவையையும் அதிகாரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அமரவீர, துமிந்த குழுவின் மனமாற்றம் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment