அமைச்சுப் பதவியொன்று இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வது மிகக் கடினமான செயல் என தெரிவிக்கிறார் தலதா அத்துகோறள.
மீண்டும் நீதியமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் அஸ்கிரிய சென்ற அவர், அங்கு மகாநாயக்கர்களை சந்தித்து உரையாடியுள்ளார். இதன் போது விசேட உயர் நீதிமன்றங்கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர், அதற்கான இடத்தை ஒதுக்குவதிலேயே தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.
அமைச்சுப் பதவி வகிப்பதனால் பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது இலகுவாக அமைவதாக தலதா விளக்கமளித்துள்ளமையும் தற்போதைய அமைச்சரவையில் மேலும் இருவரை சேர்த்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முயல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment