அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க தரப்பு 'தேசிய' அரசொன்றை உருவாக்க முனைந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆராய சட்டப்புத்தகத்தைப் புரட்ட நேரிடும் என்கிறார் லக்ஷ்மன் யாப்பா.
சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடுவதே ஜனாதிபதி செய்ய வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கையென அவர் மேலும் தெரிவித்துள்ள அதேவேளை ஏலவே இரு தடவைகள் நீதிமன்றில் சட்டமா அதிபரின் சட்ட விளக்கங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதன் மூலம் வென்ற ஒரு உறுப்பினரைக் கொண்டு அக்கட்சியுடன் தேசிய இணைந்த தேசிய அரசை உருவாக்க ரணில் தரப்பு முயல்வதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை அவ்வாறு ஒற்றைக் கட்சியுடன் இணைவது தேசிய அரசாகாது என கம்மன்பில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment