கல்முனை நூறாணியா பள்ளிவாசல் மையயவாடி நிலத்தொகுதியை சுத்தப் படுத்திக் கொள்ள பள்ளிவாசல் நிருவாகத்தின் அழைப்பின் பெயரில் மேற்கொள்ளப் பட்ட பாரிய சிரமதான நிகழ்வு இன்று சனிக்கிழமை (29) காலை 07.00 இடம்பெற்றது.
மேற்படி சிரமதான நிகழ்வில் கல்முனை நூராணியா பள்ளி நிருவாகத்தினருடன் கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் நிருவாகிகள், கல்முனை முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல் நிருவாகிகள், கல்முனையில் உள்ள பொது அமைப்புகள், விளையாட்டு கழகங்களின் அங்கத்தவர்கள்,சமூக நலன்விரும்பிகள் என நூற்றுக்கணக்கானவகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மையவாடியில் காணப்பட்ட குப்பை கூளங்கள் , கட்டிட இடிபாடுகள், புட்பூண்டுகள், குப்பைகள் என பெருமளவில் அகற்றப்பட்டது டன் கல்முனை மாநகர சபை தனது கழிவகற்றல் வாகன வசதிகளை வழங்கியுள்மை குறிப்பிடத்தக்கதாகும்.
-எம்.என்.எம்.அப்ராஸ்
No comments:
Post a Comment