அண்மைக்காலமாக ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து வந்த சரத் பொன்சேகா, அதற்கு மன்னிப்புக் கோரினாலன்றி அவருக்கு அமைச்சுப் பதவியை கொடுக்கத் தயாரில்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடம்பிடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொன்சேகா உட்பட ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கபினர் அந்தஸ்து வழங்க ஜனாதிபதி மறுத்திருந்த நிலையில் புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்றிருந்தது.
இப்பின்னணியில் சரத் பொன்சேகா மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் நீதிமன்றை நாடவுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment