அமைச்சு பதவி வேண்டாம் எனக் கூறியதாக தெரிவிக்கும் சிறு கட்சிகளின் தலைவர்களும் தமக்கான அமைச்சுப் பதவிகளை விவாதித்துப் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையின் எண்ணிக்கையை 30க்குள் சுருக்கும் தேவை ஏற்பட்ட போது மலிக் சமரவிக்ரமவைத் தொடர்ந்து சிறு கட்சிகளின் தலைவர்களும் அவ்வாறே வேண்டாம் என்று சொன்னதாக அவர்களின் ஆதரவாளர்கள் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர். மனோ கணேசன் வெளியிட்ட தகவலின் பின்னணியில் இப்பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், நாளைய தினம் அமைச்சரவை நியமனத்தின் போது குறித்த நபர்களும் தமது பதவிப் பிரமாணத்துக்காகக் காத்திருப்பதாக தகவல் அறியமுடிகிறது.
No comments:
Post a Comment