மாவனல்லை, ரந்திவெல மற்றும் மஹத்தேகம பகுதிகளில் இரு புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி அரசமைந்த கையோடு இவ்வாறு இடம்பெற்றிருப்பது பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதற்கான சதித் திட்டம் எனவும் கபீர் ஹாஷிமுக்கு சங்கடத்தை உருவாக்குவதே நோக்கம் எனவும் அக்கட்சி சார்பானோர் தெரிவிக்கின்றனர்.
மாவனல்லையில் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கூட்டத்தில் இது தொடர்பில் உரையாடப்பட்டுள்ளதுடன் அங்கு கருத்து வெளியிட்ட ஹிருனிகா பிரேமசந்திர, இது நிச்சயமாக கபீர் ஹாஷிமுக்கு சேறு பூச எடுத்த முயற்சியென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment