முன் கூட்டியே நடாத்தப்படவுள்ள இஸ்ரேலிய தேர்தலில் கடும்போக்குவாதி நேதன்யாஹு மீண்டும் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பலஸ்தீனத்திலிருந்து முஸ்லிம்களை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என சர்ச்சைக் கருத்துரைத்ததன் பின்னணியில் நேதன்யாஹுவின் புதல்வர் அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தினால் தடை செய்யப்பட்டிருந்தார்.
டொனால்ட் ட்ரம்பின் உதவியில் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக்குவதிலும் நெதன்யாஹு வெற்றி கண்டுள்ள அதேவேளை அவுஸ்திரேலியாவும் அதனை அங்கீகரித்துள்ள நிலையில் நேதன்யாஹுவின் செல்வாக்கு உயர்ந்துள்ளமை குறப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment