இலங்கையின் உண்மையான வீரர் என தனது நண்பன் ஞானசாரவை வர்ணித்துள்ள மியன்மாரின் அசின் விராது, விட்டுக்கொடுக்காது ஞானசார தொடர்ந்தும் போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து செய்தியனுப்பியுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படும் ஞானசார தொடர்ந்தும் இனவாதிகள் மத்தியில் ஆளுமையுடனேயே திகழ்வதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரும் ஞானசாரவை சென்று பார்வையிட்டிருந்தனர்.
இதேவேளை, ஞானசாரவுக்கு பரிசொன்றையும் அனுப்பி வைத்துள்ள அசின் விராது, தனது நண்பனுக்கு இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment