இலங்கையிலிருந்து இத்தாலி, கிறீஸ், சைப்ரஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு கறிவேப்பிலை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய இராச்சியத்திலும் இவ்வாறே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இலங்கையர் வர்த்தக நிலையங்களில் மாற்று வழிகளில் கறிவேப்பிலை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இத்தடை குறித்து இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதரகம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையிலிருந்து உணவுப் பண்டங்கள் கொண்டு செல்வது தொடர்பில் ஐரோப்பிய யூனியனில் கூடுதல் அவதானம் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment