மாவனல்லை மற்றும் உடுநுவர - யட்டிநுவர பகுதிகளில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் மாவனல்லையில் ஆர்ப்பாட்ம் ஒன்றை நடாத்துவதற்கு இரவணா பலய முயற்சி செய்துள்ளதாக அறியமுடிகிறது.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் இதற்கு பொலிசார் அனுமதிக்கப் போவதில்லiயென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை புத்தர் சிலை உடைப்புகள் மூலம் நாட்டின் ஸ்தீரத்தன்மையை குழப்புவதற்கு இனவாத சக்திகள் முயற்சி செய்கின்றமை அவதானிக்கப்படுவதோடு சட்ட - ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் தற்சமயம் நாட்டில் இல்லையென்பதும் முஸ்லிம் சமூகம் அவதானமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment