மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்பில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மேலும் சிலரைத் தேடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏலவே கைதான முஸ்லிம் இளைஞர் மேலும் பலரின் (முஸ்லிம்கள்) பெயர்களை வெளியிட்டுள்ளதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்த நிலையில் மேலதிக விசாரணைகள் மற்றும் தேடல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதேசத்தில் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன் இதுவரையில் 7 பேரை பொலிசார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment