அமைச்சரவை பெயர் பட்டியலுக்கு என்ன நடந்தது; ஜனவரியில் விளக்கம்: ரணில் - sonakar.com

Post Top Ad

Saturday, 22 December 2018

அமைச்சரவை பெயர் பட்டியலுக்கு என்ன நடந்தது; ஜனவரியில் விளக்கம்: ரணில்



பிரதமரின் அமைச்சரவைக்கான முன்மொழிவில் அடங்கியிருந்த சில பெயர்களை ஜனாதிபதி நீக்கியிருந்ததாக வெளியான தகவல்கள் குறித்து தான் ஜனவரியில் நாடாளுமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.



விஜேமுனி சொய்சாவின் பெயர் தான் வழங்கிய பட்டியலில் இருக்கவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், இது பற்றி தவறான தகவல்களை பிரசுரிக்கும் ஊடகங்களுக்கு எதிராக வழக்காடினால் விஜேமுனி பாரிய தொகையை இழப்பீடாகப் பெற முடியும் எனவும் தெரிவிக்கிறார்.

சரத் பொன்சேகா, ரங்கே பண்டார உட்பட ஆளுங்கட்சிக்கு மாறிய சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் கபினட் பதவிகள் மறுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்ற நிலையில் ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment