பாரிய லஞ்ச ஊழலில் ஈடுபட்டோரை தண்டிக்கக்கூடிய லகையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்ற ஜனாதிபதி, அதற்கான பிரேரணையை அரசாங்கம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஐந்து மாதங்களுக்கு மேலாக இதற்கான யோசனை கிடப்பில் இருப்பதாகவும் தற்போது அது துரிதப்படுத்தப்படுவதன் மூலமே மத்திய வங்கி பிணை முறி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களையும் தண்டிக்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
குறித்த விடயம் தொடர்பில் தான் கண்டிப்பாக இருப்பதாகவும் இழந்த பொது மக்கள் பணம் மீட்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்ற ஜனாதிபதி, தமது ஆணைக்குழு அறிக்கை அடிப்படையில் 2007ம் ஆண்டிலிருந்து மத்திய வங்கியில் இவ்வாறு மோசடி இடம்பெற்று வந்துள்ளதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment