மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற முடிவுள்ள நிலையில் சு.க விலுள்ள மஹிந்த எதிர்ப்பாளர்களை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மும்முரமாக செயற்பட்டு வருகிறார்.
ஏலவே அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒற்றை உறுப்பினரைப் பயன்படுத்துவதற்கு ரணில் தரப்பு திட்டமிட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை இணைத்து தேசிய அரசை நிறுவுவதற்கு ஐ.தே.க ஆர்வம் காட்டி வருகிறது.
மஹிந்தவை எதிர்த்தே முன்னர் கூட்டாட்சியில் ஸ்ரீலசுகட்சியினர் நிலைத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment