
அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஜனாதிபதி அதனை மீறியுள்ளமை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பதவி விலகுவதே ஆரோக்கியமானது என கருத்து வெளியிட்டுள்ளார் குமார வெல்கம.
ஒக்டோபர் 26ம் திகதி இடம்பெற்ற திடீர் அரசியல் நிகழ்வுகளை வெளிப்படையாக விமர்சித்து வந்த வெல்கம, பெரும்பான்மைப் பலம் உள்ளவர்களிடமே ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், தற்போதைய மாற்றத்தை வரவேற்றுள்ள அவர் ஜனாதிபதி பதவி விலகுவது ஆரோக்கியமானது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment