கொழும்பு: லிப்ட் விபத்தில் ரக்பி வீரர் உயிரிழப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 29 December 2018

கொழும்பு: லிப்ட் விபத்தில் ரக்பி வீரர் உயிரிழப்பு!


இரவு கேளிக்கை விடுதியொன்றின் லிப்டில் ஏற்பட்ட விபத்தையடுத்து அதிலிருந்த பிரபல ரக்பி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமுற்ற சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.



CR & FC கழகத்துக்காக விளையாடும் கோகில சம்மந்தபெருமவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வசீம் தாஜுதீனின் மரணமும் மஹிந்த அரசின் போது விபத்தென மூடி மறைக்கப்பட்டிருந்த அதேவேளை மைத்ரி - ரணில் கூட்டாட்சி அதனைக் கொலையென அறிவித்து கடந்த மூன்றரை வருடங்களாக விசாரணைகளை நடாத்திக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


உயிரிழந்தவர் கொழும்பு, வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவராவார்.

No comments:

Post a Comment