திருமண அழைப்பிதழ்: ரோஹித ராஜபக்ச மறுப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 30 December 2018

திருமண அழைப்பிதழ்: ரோஹித ராஜபக்ச மறுப்பு!


மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹிதவுக்கு திருமணம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியையும் அதனுடன் இணைக்கப்பட்டு வரும் திருமண அழைப்பிதழையும் 'போலியானவை' என மறுத்துள்ளார் ரோஹித ராஜபக்ச.



இதற்கிடையில் மஹிந்த ராஜபக்சவின் இன்னொரு புதல்வரான யோசித்த ராஜபக்ச தலையில் பலத்த காயத்துக்குள்ளாகி சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிறிதொரு தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் மீதான பொது மக்களின் வெறுப்பை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வளர்ச்சி பெற்று வந்த மஹிந்த ராஜபக்ச ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் பின் ஒட்டுமொத்தமாக ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பை சந்தித்து தற்போது பெருமளவு கிண்டலடிக்கப்பட்டு வருகின்றமையும் அவரது குடும்பத்தார் பற்றியும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையும் அவற்றுள் பல உண்மைக்குப் புறம்பாகவே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment