நாரேஹன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 49 வயது பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஜாஎல பகுதியில் தாக்குதலுக்குள்ளாகி மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜாஎல, நிவந்தம பகுதியில் ஏற்பட்ட தகராறு ஒன்றிலேயே குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் சார்ஜன்டின் வீட்டுக்குள் புகுந்தே தாக்குதல் நடாத்தியுள்ளதோடு கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment