மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தை விசாரிக்க தமது அமைச்சிலிருந்து விசேட குழுவொன்றை நியமித்துள்ளார் சஜித் பிரேமதாச.
மாவனல்லை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை ஆறு முஸ்லிம் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதுடன் மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், உடைக்கப்பட்ட சிலைகளை புனர்நிர்மாணம் செய்து அடுத்த வாரத்திற்குள் மீள நிறுவவதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சு மட்ட விசாரணைக்குழு விரிவான அறிக்கையொன்றை அமைச்சரிடம் ஒப்படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment