ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு மஹிந்தவுக்கு ஆதரவளிப்பதற்கு பேரம் பேசப்பட்ட அமைச்சுப் பதவி மற்றும் 50 கோடி ரூபா பணத்தையும் புறக்கணித்து கட்சிக்கு விசுவாசமாக தியாகம் செய்த தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமை குறித்து தொடர்ந்து விசனம் வெளியிட்டு வருகிறார் பாலித ரங்கே பண்டார.
இந்நிலையில், இன்னும் ஒரு மாத காலத்துக்குள் தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாவிட்டால் தான் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும் அவர் காலக்கெடு விதித்துள்ளார்.
ரங்கே பண்டார, சரத் பொன்சேகா உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளுந்தரப்புக்கு ஆதரவளித்தவர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க மைத்ரி மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment