நாளை காலை 8.30 அளவில் முதற்தொகுதி அமைச்சரவை நியமனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பெரும்பாலும் மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு ஒக்டோபர் 26க்கு முன்னிருந்த பதவியே கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்று கல்வியமைச்சும் அகில விராஜ் வசமே இருக்கும் என ஐ.தே.க தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, பதவி வேண்டாம் எனக் கூறியதாக பிரச்சாரம் செய்யும் சிறு கட்சிகளின் தலைவர்களும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கவுள்ளனர்.
இதற்கிடையில் ஜனாதிபதி பட்டியலில் இருந்து ஒரு சிலரின் பெயர்களை நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் அவை ஊர்ஜிதப்படுத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment